தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காமன் லா அட்மிஷன் டெஸ்ட்

காமன் லா அட்மிஷன் டெஸ்ட்

காமன் லா அட்மிஷன் டெஸ்ட்


ஆக 28, 2023 12:00 AM

ஆக 28, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 28, 2023 12:00 AM ஆக 28, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய அளவிலான பிரதான நுழைவுத்தேர்வு, காமன் லா அட்மிஷன் டெஸ்ட்- கிளாட். 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்: 
ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பு - எல்.எல்.பி., முதுநிலை பட்டப்படிப்பு - எல்.எல்.எம்.,
தகுதிகள்:
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மார்ச் / ஏப்ரல் 2024ல் நடைபெறும் தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
எல்.எல்.எம்., அல்லது அதற்கு இணையான சட்டப் படிப்பில் சேர, இளநிலை சட்ட பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஏப்ரல் / மே 2024ல் நடைபெறும் இளநிலை பட்டப்படிப்பிற்கான இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
இளநிலை பட்டப்படிப்பிற்கான தேர்வில் ஆங்கிலம், பொதுஅறிவு, லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதுநிலை பட்டப்பிடிப்பிற்கான தேர்வில் அரசியலமைப்பு சட்டம், நிர்வாக சட்டம், குடும்ப சட்டம், குற்றவியல் சட்டம், கம்பெனி சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், லா ஆப் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மாற்றம்:
இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், முன்பு 150 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் 120 கேள்விகளாக குறைக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை:
https://consortiumofnlus.ac.in/clat-2024/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://consortiumofnlus.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us