sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அறிவோம் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

/

அறிவோம் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அறிவோம் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அறிவோம் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்


செப் 11, 2023 12:00 AM

செப் 11, 2023 12:00 AM

Google News

செப் 11, 2023 12:00 AM செப் 11, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கன்ட்ரோல் இன்ஜினியரிங், ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பொறியியல் துறைகளின் கலவையே மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். 
துறையின் வளர்ச்சி
2018ல் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்ட, மெக்கட்ரானிக்ஸ் மற்றும் விவசாய ரோபோக்களின் சந்தை 24.2 சதவீத வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 3.89 பில்லியன் டாலராக இருந்த உலகளாவிய ஆட்டோமேடிக் வாகன சந்தை, 2024ம் ஆண்டில் 10 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரோபோ முதல் ராக்கெட் வரை
கணினி மூளையுடன் இருக்கும் பிரபல சோபியா ரோபோவின் நகர்தல், பேசுதல், இயக்கம், கை, கால் அசைவு, கண் பார்வை என அனைத்தும் மெக்கட்ரானிக்ஸ் உத்தி கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பல விண்வெளித் திட்டங்கள் மெக்கட்ரானிக்ஸ் பொறியியலை பயன்படுத்துகின்றன. மேலும், ஐ-லிம்ப் எனப்படும் செயற்கை கை, சி.என்.சி., இயந்திரம், கார்கள் ஆகியவற்றில் கணினி மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் நுட்பத்தில் மெக்கட்ரானிக்ஸ் பயன்பாடு கட்டாயம் இருக்கும்.
மேலும், தானியங்கி கதவு, ரோபோடிக் அறுவை சிகிச்சை, எஸ்க்லேட்டர், விமான எஞ்சின்கள், செயற்கைக்கோள், ராக்கெட் ஏவுகணைகள், அதி கனரக சரக்கு விமானங்கள், விண்கலத்தில் உள்ள தகவல் தொடர்பு கருவிகள், செயற்கைக்கோள் உந்துவிசை மற்றும் உபகரணங்கள், பெரிய தொலைநோக்கிகள் மற்றும் அதிக ஆற்றல் கொண்ட லேசர் உபகரணங்கள் என பலவற்றில் மெகாட்ரானிக்ஸ் பயன்பாடுகள் உள்ளன.
படிப்பு மற்றும் தகுதி
இளநிலை மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பின் கால அளவு 4 ஆண்டுகள். இவற்றில் சேர 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான பிரபல கல்வி நிறுவனங்கள் இப்படிப்பு வழங்கப்படுகிறது. 
பாடத்திட்டங்கள்:
பொறியியல் வேதியியல், கணிதம், இயந்திரங்களின் கோட்பாடு, தொழில்நுட்ப தொடர்பு, இயந்திர கூறுகளின் வடிவமைப்பு, தொழிற்சாலை ஆட்டோமேஷன், தொழில்துறை மேலாண்மை, மெக்கட்ரானிக்ஸ் சிஸ்டம் லேப் ஆகியவை முக்கிய பாடத்திட்டங்களாக உள்ளன.
வேலை வாய்ப்புகள்
வளர்ந்து வரும் துறையாக கருதப்படும் இத்துறையில், நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது. மெக்கட்ரானிக்ஸ் ஆர்கிடெக்ட், ஆட்டோமேஷன் இன்ஜினியர், வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளர், எலக்ட்ரோ மெக்கானிக்கல் இன்ஜினியர், ஆட்டோமேஷன் பொறியாளர், மெக்கட்ரானிக்ஸ் பொறியாளர், ரிசர்ச் அசிஸ்டென்ட் என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. 






      Dinamalar
      Follow us