செப் 16, 2023 12:00 AM
செப் 16, 2023 12:00 AM
மாணவர்களுக்கு சர்வதேச கல்வி அனுபவத்தை வழங்கும் வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகத்துடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கல்வி பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த மாணவரகள் பர்ன் பல்கலைக்கழகத்தில் இரண்டு செமஸ்டர்களை படிக்கலாம்.
யார் படிக்கலாம்?:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங், மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இதில் பங்குபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது துறை தலைவரின் வாயிலாக அண்ணா பலகலைக்கழகத்தின் சர்வதேச உறவு மைய இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.annauniv.edu

