Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு

10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு

10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு


UPDATED : நவ 05, 2025 07:49 AM

ADDED : நவ 05, 2025 07:49 AM

Follow on Google

UPDATED : நவ 05, 2025 07:49 AM ADDED : நவ 05, 2025 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 61 ஆயிரத்து 56 பேர் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ளனர்.

வரும், 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பொதுத்தேர்வை விரைந்து முடிக்க தேர்வுகள் துறை ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தகுதியானவர்கள் முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் பிப். 17 முதல் துவங்க உள்ளதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. நேற்று கல்வி அமைச்சர் மகேஷ், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் தேதி, அட்டவணை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 2025 - 2026 கல்வியாண்டு, 16,155 மாணவர், 16 ஆயிரத்து 429 மாணவியர் என 32 ஆயிரத்து, 584 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும், 13 ஆயிரத்து 28 மாணவர், 15 ஆயித்து 444 மாணவியர் என, 28 ஆயிரத்து 472 பேர் பிளஸ் 2 தேர்வையும் எதிர்கொள்ள உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 61 ஆயிரத்து 56 பேர் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ளனர். நடப்பு 2025 - 2026 ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இல்லை என சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap