sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துணை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு துவக்கம்

/

துணை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு துவக்கம்

துணை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு துவக்கம்

துணை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு துவக்கம்


UPDATED : மே 26, 2024 12:00 AM

Google News

UPDATED : மே 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்,, பி.பிடி., பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற செவித்திறன், பேச்சு, மொழி நோய் குறியியல் உள்ளிட்ட, 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000த்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது. ஜூன் 21 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, மருத்துவ கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது: துணை மருத்துவ படிப்புகளுக்கு இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு இணையம் வழியாக அணுக முடியாதவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களுடன், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி உதவி மையத்தில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்த பின், துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கும். இவ்வாறு கூறினர்.





    • Dinamalar Events


    Dinamalar