Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது

பள்ளி கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது

பள்ளி கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது


UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM

ADDED : ஜூன் 29, 2024 10:08 AM

Follow on Google

UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM ADDED : ஜூன் 29, 2024 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு:
கேரளாவில் பள்ளி கட்டடத்திற்கு தகுதிச்சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது செய்யப்பட்டனர்.

கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கும்மம்கல்லு பகுதியில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியில் புதிய கட்டடத்திற்கு தகுதி சான்று கோரி தொடுபுழா நகராட்சியில் பள்ளி நிர்வாகம் ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்தது.

இதுதொடர்பாக பள்ளி மேலாளர் நேற்று முன்தினம் அந்நகராட்சி உதவி பொறியாளர் அஜியை 56, தொடர்பு கொண்டபோது தகுதி சான்று வழங்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிழக்கு மண்டல கண்காணிப்பாளர் பிஜோஅலெக்ஸ்சாண்டரிடம் தெரிவித்தனர்.

அவரது அறிவுறுத்தலின்படி பள்ளி நிர்வாகம் தரப்பில் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அஜியிடம் ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது. அப்போது தொடுபுழா டி.எஸ்.பி.ஷாஜூஜோசப் தலைமையில் அதிகாரிகள் அஜி மற்றும் லஞ்சம் பெற ஏஜன்ட் ஆக செயல்பட்ட முதலகோட்டத்தைச் சேர்ந்த ரோஷன் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நகராட்சி தலைவர் சனிஷ்ஜார்ஜ் கூறியபடி லஞ்சம் கேட்டதாக தெரியவந்ததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உதவி பொறியாளர் அஜி இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap