Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து


UPDATED : மார் 22, 2025 12:00 AM

ADDED : மார் 22, 2025 06:36 PM

Follow on Google

UPDATED : மார் 22, 2025 12:00 AM ADDED : மார் 22, 2025 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு:
பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட முதலில் மூன்று மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மலப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெருந்தல்மன்னா அடுத்த தாளக்கோடு பகுதியில் பிடிஎம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் மலையாள மீடியம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தப் பள்ளியில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவன் ஒருவன் நேற்று நடந்த தேர்வுக்கு வந்துள்ளான்.தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த நிலையில், அங்கிருந்த மாணவர்கள் மூவரை கத்தியால் குத்தி உள்ளான். காயமடைந்த மாணவர்கள் மூவரும் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக கத்தியால் குத்திய மாணவன் உட்பட இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன், ஏற்கனவே தகராறில் ஈடுபட்டதற்காக பள்ளி நிர்வாகத்தினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டவன்; போலீசாரால் எச்சரிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap