Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நுாலக பாடவேளைக்கு முக்கியத்துவம் கொடுங்க!

நுாலக பாடவேளைக்கு முக்கியத்துவம் கொடுங்க!

நுாலக பாடவேளைக்கு முக்கியத்துவம் கொடுங்க!


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 03:42 PM

Follow on Google

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 03:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசுப்பள்ளிகளில், அன்றாட செய்திகளை அறிந்து கொள்வதற்கு, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியாண்டு, 2024 - 25 துவங்கி பள்ளிகளில் வகுப்புகள் நடக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், உயர்கல்வியை வழிகாட்டுவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான மன்றங்களும் துவக்கப்பட்டு, அதற்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
ஆனால் மாணவர்களுக்கு, பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் படிப்பதற்கான நுாலகத்திட்டத்திற்கு, அரசுப்பள்ளிகளில் முக்கியத்துவம் குறைவாக உள்ளது. துவக்கம் முதல் நடுநிலை வகுப்பு வரை, பல்வேறு கதைகளின் புத்தகங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்படுகின்றன. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவாக உள்ளன.
மாணவர்களுக்கு அன்றாட செய்திகளை அறிந்து கொள்வதற்கும், பொது அறிவு சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும், செய்தித்தாள் படிக்கும் பழக்கம் காணாமல் போய் விட்டது. பாடபுத்தகத்தை கடந்து, பல்வேறு துறை சார்ந்த பொது அறிவு புத்தகங்களை படிப்பதற்கு, மாணவர்களான அடிப்படை தளத்தை பள்ளிகளில் உருவாக்க வேண்டும்.
இதனால், மாணவர்களுக்கு சமூக பொறுப்புகளையும் கற்றுக்கொள்வதற்கான நிலை ஏற்படும் என, பெற்றோரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில் பல சிறப்பு செயல்பாடுகள் மட்டுமின்றி, பள்ளி படிப்பு துவங்கி அவர்களின் உயர்கல்வி வரை எந்த குழப்பமில்லாமல், தடையில்லாமல் படிப்பதற்கும் திட்டங்கள் உள்ளன.
ஆனால் இன்றைய மாணவர்கள், பொது அறிவு சார்ந்த செயல்பாடுகளில் பின்தங்கி உள்ளனர். செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக பள்ளிகளில் பின்பற்ற வேண்டும். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். நுாலக பாடவேளைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap