sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி


UPDATED : செப் 06, 2024 12:00 AM

Google News

UPDATED : செப் 06, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபிட்ஷா துர்கா தாக்கல் செய்த மனு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 சார்பில் மார்ச் 28ல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சில பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை கிடைமட்ட ஒதுக்கீட்டில் இல்லாமல் செங்குத்து ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன.

குரூப் - 1 தகுதி பட்டியலிலும் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் முறையாக அமல்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டிலும் பல குளறுபடிகள் நடந்து உள்ளன.

எனவே, குரூப் - 1 அறிவிப்பில், பணியிடங்களில் நடந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி விஜயகுமார் ஒத்திவைத்தார்.




    • Dinamalar Events


    Dinamalar