மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரகடத்தில் தொழிற்கல்வி களப்பயிற்சி
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரகடத்தில் தொழிற்கல்வி களப்பயிற்சி
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், அடிப்படை இயந்திரவியல் பிரிவில் பயிலும் 31 மாணவர்களுக்கு கள பயிற்சி மற்றும் தொழிற்சாலை பார்வைக்காக, ஒரகடத்தில் உள்ள அங்கு டென்னிகோ ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலைக்கு சென்றனர்.தொழிற்கல்வி ஆசிரியர்கள் திவாகர், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், தொழிற்கல்வி சார்ந்த கள பயிற்சிக்காக, ஒரகடம் சென்ற மாணவர்களின் வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகரன் வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

