சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இடஒதுக்கீடு முறையில் குளறுபடி, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட மாற்று பட்டியலை வெளியிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

