கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்
கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்
UPDATED : பிப் 22, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 05:43 PM
கரூர்:
கரூரில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 253 பேர் கணித தேர்வு எழுத வரவில்லை.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்., 8 வரை நடக்கிறது. 58 தேர்வு மையங்களில், 5,993 மாணவர்கள், 5,915 மாணவிகள் என மொத்தம், 11,908 பேர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். நேற்று நடந்த கணிதம் தேர்வில், 11,655 பேர் தேர்வு எழுதினர். 175 மாணவர்கள், 78 மாணவிகள் என மொத்தம், 253 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக, 58 தலைமை ஆசிரியர்களும், 58 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற, 935 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 140 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.