sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீலகிரி ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கவுரவிப்பு

/

நீலகிரி ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கவுரவிப்பு

நீலகிரி ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கவுரவிப்பு

நீலகிரி ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கவுரவிப்பு


UPDATED : நவ 28, 2024 12:00 AM

Google News

UPDATED : நவ 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்கள், பேலிஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ரோஹினி நிலேகனி பிலாந்திராபிஸ் உடன் இணைந்து, 'நீலகிரி ஒரு பகிரப்பட்ட வனப்பகுதி ஆவணப்படம் கல்லுாரி வளாகத்தில் திரையிடப்பட்டது.

பிரபல நேசனல் ஜியோகிராபிக்ஸ் ஆராய்ச்சியாளர் மற்றும் காட்டுயிர் பட தயாரிப்பாளர் சந்தேஷ் காதுாரின் இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம், கோவை விழாவின் ஒரு பகுதியாக திரையிடப்பட்டது.

இரண்டு ஆண்டுகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், உலகின் மிக உயிர்வளமான பகுதிகளில் ஒன்றான நீலகிரியின் தனித்துவமிக்க இயற்கை மற்றும் வனஉயிர் வாழ்வியலுக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 5,500 சதுர கி.மீ., உள்ளடக்கிய இப்பகுதியில், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் பகிர்ந்து உள்ள வாழ்வினை காட்டுகிறது.

ஆவணப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ரோகன் மதியாஸ், கேமரா பர்சன் பரிணித் கவுடா, கள உதவியாளர் சவுரவ் கவுடா மற்றும் ஒளிப்பதிவாளர் நகுல் ராஜ் ஆகியோர் ஆவணப்படத்தின் உருவாக்கம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர், நிர்வாகிகள் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் ஆவணப்படத்தை கண்டுகளித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar