தொடர் கற்றலால் அங்கீகாரம் கிடைக்கும் பட்டமளிப்பு விழாவில் பேச்சு
தொடர் கற்றலால் அங்கீகாரம் கிடைக்கும் பட்டமளிப்பு விழாவில் பேச்சு
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:01 AM
மதுரை :
ஒரு பணியை இவரிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்வார் என நிறுவனம் உங்களை அங்கீகரிக்கும் அளவிற்கு தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர் கற்றல் இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும் என மதுரை டி.வி.ஆர்.நகர் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டீஸ் 26 வது பட்டமளிப்பு விழாவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் துளசிராஜ் ரவில்லா பேசினார்.
கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் துளசிராஜ் ரவில்லா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இக்கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கேற்ற தொழிற்கல்வி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தற்போது மாணவர்களாகிய நீங்கள் பாதுகாப்பான சூழலில் உள்ளீர்கள். வேலைவாய்ப்பில் சவால் களை எதிர்கொள்ளதன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். ஒரு பணியை இவரிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்வார்எனநிறுவனம் உங்களை அங்கீகரிக்கும் அளவிற்கு தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.தொடர்கற்றல் இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும்.
டில்லி திகார் சிறையில் வன்முறை, ஊழல்நிறைந்த சூழலில் ஐ.பி எஸ்., அதிகாரி கிரண்பேடி சவால்களை எதிர்கொண்டு அங்கு சீர்திருத்தம், மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொண்டார். அவருக்கு மகசேசே உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.
கோவை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர். முயற்சி, கடின உழைப்பால் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு தொழிலில் சாதனை புரிந்தார். அவருக்கு 2016ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். பட்டதாரிகளான நீங்கள் உண்மை, நேர்மையாக உழைத்தால் வெற்றிபெறலாம். அதற்கேற்ப உங்கள் எண்ணங்களை வடிவமைத்துக்கொண்டால் சாதனை படைக்கலாம் என்றார்.
கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார், முதல்வர் சுஜாதா, தேர்வுகட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) குருபாஸ்கர், டீன் பிரியா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.