Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/2 + 1 கேட்குது ம.தி.மு.க.,

2 + 1 கேட்குது ம.தி.மு.க.,

2 + 1 கேட்குது ம.தி.மு.க.,


ADDED : பிப் 05, 2024 01:08 AM

Follow on Google

ADDED : பிப் 05, 2024 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: லோக்சபாவில் இரண்டு தொகுதிகளும், ராஜ்யசபாவில் ஒரு இடமும் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் ம.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

சென்னை அறிவாலயத்தில், லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., - - ம.தி.மு.க., இடையே நேற்று பேச்சு நடந்தது.

தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, வேலு, பெரியசாமி, பொன்முடி, பன்னீர்செல்வம் மற்றும் ஆ.ராஜா ஆகியோர் பேச்சு நடத்தினர். ம.தி.மு.க., சார்பில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விருதுநகர், திருச்சி, தேனி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலுார் என, ஆறு தொகுதிகளும், விருதுநகர், திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டும் வேண்டும் என, ம.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட பேச்சில், கேட்கும் தொகுதிகளை எல்லாம் ஒதுக்க முடியாது என, தி.மு.க., மறுத்துள்ளது. ம.தி.மு.க., அர்ஜுனராஜ் கூறுகையில், ''இரு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் கேட்டுள்ளோம். கண்டிப்பாக பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்,'' என்றார்.

2 தொகுதிகள் ஒதுக்கினால்

வேறு முடிவு: மார்க்சிஸ்ட்தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், மத்திய குழு தலைவர் சம்பத், நிர்வாகிகள் சண்முகம், கனகராஜ், குணசேகரன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை, மதுரை தொகுதிகளுடன் கூடுதலாக, தென்காசி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் என, ஐந்து தொகுதிகளை கேட்டு பட்டியலை வழங்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இ.கம்யூ., வெற்றி பெற்ற நாகப்பட்டினம் தொகுதியை மா.கம்யூ., கேட்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.பேச்சு நடந்த பின், சம்பத் கூறுகையில், ''கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தோம். இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால், அரசியல் ரீதியாக தேவையான முடிவை எடுப்போம்,'' என்றார்.



முஸ்லிம் லீக், வி.சி.,யுடன் 12ல் பேச்சு

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவது; அழைப்பு விடுப்பது குறித்து, முதல்வர் தான் முடிவு எடுப்பார். வி.சி., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன், வரும் 12ம் தேதி பேச்சு நடத்தப்படும்.- ஐ.பெரியசாமி,தி.மு.க., துணை பொதுச்செயலர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap