Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/ டில்லி உஷ்ஷ்ஷ்: ஷிண்டேவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ஷிண்டேவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ஷிண்டேவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!


ADDED : அக் 20, 2024 03:07 AM

Follow on Google

ADDED : அக் 20, 2024 03:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தேர்தல் தேதிகள் அறிவித்தபின், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்; இதனால், மாநில மற்றும் மத்திய அரசு எந்தவித சலுகைகளையும் மக்களுக்கு அறிவிக்க முடியாது. இதை எப்படி சமாளிப்பது? இதற்கு சரியான உதாரணம், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தேர்தல் கமிஷன் இம்மாதம் 15ல் அறிவித்தது; இது அனைவரும் எதிர்பார்த்தது தான். இந்த அறிவிப்பு வரும் முன்னரே, அதாவது, இந்த அக்டோபர் மாதத்தில், 200 முக்கிய முடிவுகளை எடுத்து விட்டது, மஹாராஷ்டிரா அமைச்சரவை. மக்களின் வரிப்பணத்தில், அவர்களுக்கான சலுகைகளை இந்த முடிவுகள் வாயிலாக அறிவித்து விட்டார் ஷிண்டே.

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு, மஹாராஷ்டிர அரசு துக்கம் அறிவித்து இருந்தது. ஆனாலும், அப்போதும் தன் அமைச்சரவையைக் கூட்டினார் ஷிண்டே. இதில் ஏறக்குறைய, 70க்கும் மேற்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளனவாம்.

மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இலவச அறிவிப்புகளை வாரி வீசியுள்ளார், ஷிண்டே. மஹாராஷ்டிராவிற்கு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக கடன் இருந்தும், அது குறித்து ஷிண்டே கவலைப்படவில்லை.

இந்நிலையில், தேர்தலுக்கு முன் முதல்வர் அறிவித்துள்ள இலவசங்கள், உண்மையிலேயே அமல்படுத்தப்படுமா என, பா.ஜ., கூட்டணி கட்சியினரே சந்தேகப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap