sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்

/

கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்

கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்

கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்

38


ADDED : ஜூன் 24, 2025 06:33 AM

Google News

38

ADDED : ஜூன் 24, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தின் ஆன்மிக ஆழத்தையும், தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தையும் பறைசாற்றி அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

ஹிந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதேனும் ஒரு தலைப்பில் மாநாடு நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில், தமிழகத்தில் அதிகம் வணங்கப்படும் முருகனை முன்னிறுத்தி மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள மைதானத்தில் ‛குன்றம் காக்க... கோயிலை காக்க...' எனும் தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. ஆன்மிகம் சார்ந்து மட்டுமில்லாமல், தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டை வெளிபடுத்தும் வகையில் அமைந்தது.

தமிழர் வாழ்வில் முருக பக்தி என்பது உள்ளார்ந்த உணர்வு. அத்தகைய உணர்வே எந்தவொரு அரசியல் சாயமும் இன்றி மக்களை மதுரையில் ஒன்றிணைத்தது. ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் தமிழக மக்கள் மிகுந்த ஆழத்தோடு அணுகுகிறார்கள் என்பதை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்தியுள்ளது.

மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் சொந்த செலவில் வந்தனர். பங்கேற்றவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இளைஞர்களே.

இந்த மாநாடு ஏன்


இந்தியா முழுவதும் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அறுபடை வீடுகள் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது. தமிழர் வாழ்வியலில் முருகன் நீக்கமற நிறைந்துள்ளார். முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தின் போது அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பது பக்தர்களின் வருத்தம். தொடர்ந்து சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தையடுத்து முருகன் மலையை காக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து முன்னணி இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ‛ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம்' என பேசியதும், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‛அரசியல் சார்ந்து இல்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் இணைய வேண்டும். மதம் மாறுவதை தடுக்க வேண்டும்' என வலியுறுத்தியதும் மாநாட்டில் எழுச்சியை ஏற்படுத்தியது. அரசியல் சார்ந்து இல்லாமல் பக்தியின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஒன்று திரள வேண்டும் என்ற கருத்தே மாநாட்டில் பரவலாக எதிரொலித்தது.

கந்த சஷ்டி கவசம்


மாநாட்டில் முக்கிய நிகழ்வாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.

கந்த சஷ்டி கவசம் குறித்து அண்ணாமலை பேசியபோது, ‛கந்த சஷ்டி கவசத்தை இலக்கியமாகவும், ஆன்மிகமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம். மனித உடலில் தொப்புள் கொடிக்கு கீழே உள்ள பகுதியை பழங்காலத்தில் ‛கந்த' எனவும், ‛சஷ்டி' என்றால் ‛சட்டி' என கூறப்பட்டது. தொப்புள் கொடிக்கு கீழ் உள்ள பகுதி சட்டி போல் இருக்கும். அதில் தான் கருப்பை உள்ளது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் உயிர் உண்டாகும் என்பதை குறிக்க கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது என்றார். இந்த விளக்கமும், கூட்டாக அனைவரும் பாடியதும் கந்த சஷ்டி கவசத்தை தினமும் வீட்டில் பாட வேண்டும் என்ற துாண்டுதலை பக்தர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

எங்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு


முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த பக்தர்களை, ஹிந்து முன்னணியை சேர்ந்த சுமார் 2,000 தொண்டர்கள் வழிநடத்தினர். மாநாட்டை காணும் ஆர்வத்தில் சிலர் போட்டி போட்டுக் கொண்டு மாநாட்டு திடல் முன்பு வந்தனர். மாநாட்டை நடத்திய நிர்வாகிகள், இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தியதும் அவர்கள் அமைதியாக போய் அமர்ந்தனர். வாசலில் இருந்து போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினாலும், மாநாட்டு திடலில் போலீசார் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் நின்றனர். என்றாலும் எந்த சலசலப்பும் இல்லாமல், கட்டுப்பாட்டோடு பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு சாலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்லும் போது போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்தகைய சூழலிலும் எவ்வித பிரச்னையுமின்றி தள்ளுமுள்ளு, நெரிசல் இன்றி மக்கள் கட்டுப்பாட்டோடு கலைந்து சென்றனர்.

இந்த காட்சி எல்லாம் அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. மாநாட்டிற்கு முன்னதாக மா.கம்யூ.,, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள், ‛மதநல்லிணக்கத்தை கெடுத்து கலவரத்தை உருவாக்க முருக பக்தர் மாநாடு நடக்கிறது' என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு எல்லாம் பதிலடி தருவதாய் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக மாநாடு நடந்தது.

லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று கட்சிகளுக்கு சொல்லும் பாடமாக முருகர் பக்தர் மாநாடு அமைந்து எனலாம்.

கட்சி மாநாடுகளும், முருகன் மாநாடும்

ஒரு பத்திரிகையாளர் பார்வையில்...பல்வேறு அரசியல்கட்சிகளின் மாநாடுகளில், கட்சிகளின் மெகா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர் ஒருவர், முருக பக்தர்கள் மாநாடு பற்றி ஒப்பிட்டு கூறியது:*லட்சக்கணக்கானோர் திரண்ட போதும் கூட்டத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. பக்தர்கள் வரிசையாகவே சென்றனர். உணவு வாங்க, மேடையில் தலைவர்களுக்கு சால்வையணிவிக்க என்று யாரும் முண்டியடித்து முன்னேறவில்லை. கண்ட இடத்தில் இருந்து சாப்பிடவில்லை; அதற்கான பகுதியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டனர்.*தலைவர்கள் பேசும் போதும், கலைநிகழ்ச்சிகள் நடக்கும் போதும் அரங்கில் கட்டுப்பாடுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கவில்லை. நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகே வெளியேறினர்.*நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆபாச கலைநிகழ்ச்சிகள், குத்துப்பாட்டு இல்லை; மாறாக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.* யாரும் மது அருந்தி தகராறு செய்யவில்லை; கோயிலுக்கு போவது போல பலரும் விரதத்துடன் பயபக்தியுடன் வந்தனர்.*மேடையில் அறிவிப்பு செய்பவர் சொல்வதை லட்சக்கணக்கானோர் அப்படியே கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தனர். மழை துாறிய போது யாரும் அசையவில்லை. ஆனால் கட்சிகளின் மாநாட்டில் இப்படி மழை பெய்தால் அமர்ந்திருக்கும் இருக்கையை தலையில் குடை போல் துாக்கி வைப்பார்கள்; அப்படியே நடையையும் கட்டுவார்கள்.*வந்திருந்த முருக பக்தர்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் இருந்தாலும், தலைவர்களை வாழ்த்தி கூக்குரல் இல்லை; கோஷம் இல்லை. அரங்கில் கூச்சல் இல்லை. தலைவர்களை வரவேற்று பேனர், பிளக்ஸ் இல்லை.*மிக முக்கியமாக பார்வையாளர்கள் யாரையும் வாகனங்களில் அழைத்துவரவில்லை. அந்தந்த பகுதி பக்தர்கள் குழுவாக இணைந்து வாகனம் அமர்த்தி வந்திருந்தனர். சில கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் காட்ட, உள்ளூர் நிர்வாகிகள் பணம் தந்து பார்வையாளர்களை அழைத்து வருவர். இங்கு வந்தது தானாக சேர்ந்த கூட்டம்.*பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை; மறுசுழற்சி கப்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே மைதானம் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகளே இல்லை.*நிகழ்ச்சி முடிந்ததும் இருக்கைகளை அடுக்கி வைத்து செல்லவும், குப்பைகளை பொறுக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எல்லோரும் அதனை பின்பற்றியதால் நேற்று காலையில் மைதானம் சுத்தமாக பளீச் என்று இருந்தது. ஆனால் சில கட்சிகளின் மாநாட்டு குப்பைகள் இரண்டு நாட்கள் மைதானத்தில் கிடக்கும். உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் தான் வந்து அகற்றுவர்.



அரசியலா ஆன்மிகமா

மாநாட்டில் அரசியல் கருத்துக்கள் பேசக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியது. மாநாட்டில் நேரடியாக அரசியல் கருத்துக்கள் கூறப்படாவிட்டாலும், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, பின்னணியை மாநாடு பிரதிபலித்தது. தீர்மானத்திலும், தேர்தலில் ஓட்டு வங்கியை அதிகரிக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என இடம்பெற்றிருந்தது. அண்ணாமலை பேசுகையில், ஏற்கனவே பேசிய ஹிந்து முன்னணி வழக்கறிஞர் கனிமொழியின் பேச்சை குறிப்பிட்டு, ‛தமிழகத்தில் மதுரை முருகன் மாநாட்டிற்கு முன்பு, மாநாட்டிற்கு பின்பு என்று தான் அரசியல் சரித்திரம் இருக்கும்' என்றார்....








      Dinamalar
      Follow us
      Arattai