Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


ADDED : மே 10, 2024 12:54 AM

Follow on Google

ADDED : மே 10, 2024 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், 10ம், வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக, கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம், 26, ம் தேதி துவங்கி, ஏப்.,8,ம் தேதி வரை நடந்தது.

இதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், 49 மையங்களில், பொதுத்தேர்வு நடந்தது.

புதுச்சேரி பகுதியில், 84 அரசு பள்ளிகள், 23 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 122 தனியார் பள்ளிகள் என, 229 பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து 613 மாணவர்களும், 599 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர்.

காரைக்கால் பகுதியில், 25 அரசு பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 29 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 60 பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 479 மாணவர்கள், 259 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக, 289 பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரத்து 92 மாணவர்களும், 858 தனித்தேர்வர்களும், தேர்வு எழுதினர்.

தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்தது.

தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.இந்நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap