ADDED : ஏப் 12, 2024 04:28 AM
அ நிறம் | அளவு
பாகூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள பின்னாட்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 52; இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு மனைவி விஜயா வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ராமக்கிருஷ்ணன் சிமென்ட் சீட் கொட்டகையில் இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் துாக்கிட்டு நிலையில் பிணமாக தொங்கி உள்ளார்.
தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயா அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
