Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நடைபயணம்


ADDED : செப் 18, 2024 04:22 AM

Follow on Google

ADDED : செப் 18, 2024 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் சென்றனர்.

வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இதனை சுற்றி ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமிதோறும் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.

அதன்படி நேற்று 32வது மாத ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யாபுரம், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்தபக்தர்கள், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap