தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ஐ.பி.எல். பேன் பார்க்' இன்று துவக்கம்

'ஐ.பி.எல். பேன் பார்க்' இன்று துவக்கம்

'ஐ.பி.எல். பேன் பார்க்' இன்று துவக்கம்


ADDED : மே 04, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை, பெரிய திரையில் கண்டு களிக்கும், 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.

இந்தியாவில், 50க்கும் மேற்பட்ட நகரங்களில், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., போட்டிகளை, ரசிகர்கள் பலரும், ஒன்றாக இணைந்து பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் வகையில், 'ஐ.பி.எல்., பேன் பார்க்' நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்போது புதுச்சேரியில் நடக்க உள்ளது. இதை, பி.சி.சி.ஐ., மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி இணைந்து நடத்துகிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ., செயல்பாடு மேலாளர் அமித் சித்தேஷ்வர் கூறியதாவது:

தாகூர் அரசு கல்லுாரி மைதானத்தில், இன்றும் நாளையும், ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த இரண்டு நாட்களும், மூன்று ஐ.பி.எல்., போட்டிகளை, நேரடியாக பெரிய திரையில் இலவசமாக காணலாம்.

இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கான போட்டியை மாலை 6:30 மணிக்கு கண்டுகளிக்கலாம். நாளை மதியம் 2:30 மணிக்கு சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான ஆட்டத்தையும், மாலை 6:30 மணிக்கு கோல்கட்டா மற்றும் லக்னோ அணிகளுக்கான ஆட்டத்தையும், காணலாம்.

பொதுமக்கள் மகிழும் வகையில், டி.ஜே இசை, சிறுவர்கள் விளையாடும் களம், உணவு மற்றும் குளிர்பான கடைகள் என்று பல விதமான ஸ்டால்கள் இருக்கும். இங்கு வரும் ரசிகர்களுக்கு முக்கிய வீரர்கள் கை எழுத்து போட்ட, 'டி-ஷர்ட்' குலுக்கல் முறையில் பரிசாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us