Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 16, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 05:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் விழா நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை ராம்ஜி நகரில் உள்ள பால கணபதி, பாலமுருகன், ராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, துர்கையம்மன், நவக்கிரகங்கள், முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா கடந்த 13ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை 6.30 மணிக்கு முதல்காலயாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 6.00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடந்தது.

நேற்று காலை 5.00 மணிக்கு இந்திராதி, கோபூஜை, நாடி சந்தனம், நான்காம் காலயாக பூஜை, காயத்திரி மந்திர ஹோமம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரம் கும்பாபி ேஷகமும், தொடர்ந்து 10.15 மணிக்கு ராஜகோபுரம், மூலவர், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபி ேஷகம் நடந்தது.

விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us