தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,வுக்கு போலீசார் ஆதரவு: அ.தி.மு.க., திடுக் குற்றச்சாட்டு

பா.ஜ.,வுக்கு போலீசார் ஆதரவு: அ.தி.மு.க., திடுக் குற்றச்சாட்டு

பா.ஜ.,வுக்கு போலீசார் ஆதரவு: அ.தி.மு.க., திடுக் குற்றச்சாட்டு


ADDED : மார் 26, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேட்புமனுவின்போது போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அ.தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தல் வேட்பு மனுதாக்கல் 20ம் தேதி துவங்கியது. நேற்று பா.ஜ., அ.தி.மு.க., நாம் தமிழர், சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அப்போது, வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதி என முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராம் ஆகியோரை போலீசார் தடுத்தனர்.

அப்போது, பா.ஜ.வினர் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஏன் அனுமதித்தீர்கள், அமைச்சர் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி அ.தி.மு.க.வினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் வழுதாவூர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி. வீரவல்லவன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம்செய்தார்.

மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில்; வேட்புமனு தாக்கல் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 5 பேர் மட்டுமே அனுமதி என தேர்தல் துறை அறிவித்தது. ஆனால், பா.ஜ., வேட்பு மனு தாக்கலின்போது, அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

வேட்பாளர் அமைச்சராக இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி 100 மீட்டர் பகுதி, பா.ஜ., கட்டுப்பாட்டில் இருந்தது.

இதே நிலை தொடர்ந்தால் நடுநிலையான தேர்தல்நடக்காது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

அதிகார வர்க்கமான பா.ஜ.வுக்கு தேர்தல் ஆணையம், போலீசாரும் துணை போகின்றனர் எனக் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us