ADDED : ஜூன் 11, 2024 11:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம், 64. இவருக்கு ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது. இவர் கடந்த 9ம் தேதி இரவு புதுச்சேரி முத்திரைபாளையத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சி வந்தார். உறவினர்கள் வீட்டில் தங்கிய திருஞானம் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் சந்திப்பு பகுதியில் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
