தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்


ADDED : பிப் 24, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் எதிரே அரை நிர்வாணத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கடந்த 12ம் தேதி முதல் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் எதிரே அரை நிர்வாணத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க கவுரவ தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், புருஷோத்தமன், பிரபாகரன், லுார்து மரியநாதன், முனிசாமி, அய்யனார், பெரியசாமி, பாபு, அதியமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், முதல்வர் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் காலி டிரைவர் பணியிடங்களை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொண்டு நிரப்ப வேண்டும். ரூ.10 ஆயிரம் சம்ளம், போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us