/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்குகள் 672 பேர் கைது; 216 கிலோ பறிமுதல்
/
2 ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்குகள் 672 பேர் கைது; 216 கிலோ பறிமுதல்
2 ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்குகள் 672 பேர் கைது; 216 கிலோ பறிமுதல்
2 ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்குகள் 672 பேர் கைது; 216 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 10, 2024 11:00 PM

சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்கு பதிவு செய்து, 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படடுள்ளதாக சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரியில் போலீஸ் சார்பில் பள்ளி, கல்லுாரி கல்வி நிறுவனங்களில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு மட்டும் 22 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 137 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், 87.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், 311 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல் கடந்த ஆண்டு 148 கஞ்சா வழக்கு பதிவு செய்து, 128.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 361 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரு ஆண்டுகளில் மொத்தம் 285 வழக்குகளும், 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தினசரி ஒரு கஞ்சா குற்றவாளியை கைது செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு கஞ்சா வியாபாரி ஒருவரை போதை பொருள் விற்பனை தடுப்பு காவலில் (குண்டாஸ்) கைது செய்துள்ளோம்.
மேலும் 2 பேர் மீது போதை பொருள் விற்பனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் கிடைத்தால், கட்டணம் இல்லா தொலைபேசியான 112 அல்லது 9489205100 மொபைல் போன் வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.போலீசார் தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளும் ரோந்து செல்வதுடன், வாகன சோதனை, ஈவ்டிசிங், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது இடத்தில் மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர், கூறினார்.

