Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

 தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

 தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஏப் 30, 2026 02:37 AM

Follow on Google

ADDED : ஏப் 30, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார், ஐஸ்வர்யா நகரை சேர்ந்த பாலசுப்ரமணியின் மகன் சஞ்சய், 21; தண்ணீர் கேன் போடும் தொழிலாளி. இவர் கடந்த 27ம் தேதி இரவு தனது நண்பரான சித்தலம்பட்டு கிருஷ்ணா நகர் இளங்கோ என்பவருடன், திருக்கனுார் சிவன் கோவில் எதிரே மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இளங்கோ தனது நண்பர்களை மொபைலில் தொடர்பு கொண்டு அழைத்தார். பின், 3 பைக்குகளில் அங்கு வந்த அவரது நண்பர்கள் சஞ்சயை மிரட்டி பைக்கில் வாதானுார் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, அவரது கையை கட்டிபோட்டு, தாக்கினர். பின், நேற்று முன்தினம் காலை மண்ணாடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே அவரை விட்டு, இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றனர்.

காயமடைந்த சஞ்சய் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்ற பின், திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, சித்தலம்பட்டு பழனிவேல் மகன் இளங்கோ,18; திருக்கனுார், புதுநகர் குப்புசாமி ம கன் புகழேந்தி,21; கூனிச்சம்பட்டு தியாகராஜன் மகன் பால்ராஜ், 19; ஆகியோரை கைது செய்தனர். கிருஷ்ணா உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap