ADDED : அக் 20, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த நபரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார். அதில், குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியுள்ளார்.
இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, 4 தவணைகளாக மர்மநபருக்கு ரூ. 19 ஆயிரத்து 882 செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 14 ஆயிரத்து 500, 3 ஆயிரம், 5 ஆயிரம், 2 ஆயிரம், பெண் ஒருவர் 3 ஆயிரம் என 6 பேர் மோசடி கும்பலிடம் 47 ஆயிரத்து382 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

