ADDED : பிப் 02, 2024 03:36 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 9 எஸ்.பி.,கள் அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரி காவல்துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்களை தொடர்ந்து 9 எஸ்.பி.,களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ரச்சனா சிங் ஆயுதப்படைக்கும், ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ்.பி., செல்வம் போக்குவரத்து பிரிவுக்கும், போக்குவரத்து பிரிவு எஸ்.பி., மாறன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், தெற்கு பகுதி எஸ்.பி., வீரவல்லவன் வடக்கு பகுதிக்கும், மாகி எஸ்.பி., ராஜசங்கர் வல்லட் ஊர்க்காவல் படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல ஏனாமில் பணிபுரிந்த எஸ்.பி., ரகுநாயகம், புதுச்சேரி ஸ்பெஷல் பிராஞ்சுக்கும், ஊர்க்காவல்படை எஸ்.பி., சரவணன் மாகிக்கும், வடக்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தெற்கு பகுதிக்கும், ஆயுதப்படை எஸ்.பி., ராஜசேகரன் ஏனாமிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தலைமை செயலர் ராஜிவ் வர்மா உத்தரவின்பேரில், உள்துறை சார்பு செயலர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.

