/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புழுதி பறந்த தற்காலிக சாலை தார் சாலையாக மாற்றம்
/
புழுதி பறந்த தற்காலிக சாலை தார் சாலையாக மாற்றம்
ADDED : ஜன 24, 2024 04:25 AM

வில்லியனுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியால் வடமங்கலம் பகுதியில் புழுதி பறந்த தற்காலிக சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலையாக மாற்றினர்.
புதுச்சேரி - விழுப்புரம் சாலை வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இதில், சங்கராபணி ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. எம்.என். குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரைசென்டர் மீடியன், இரு பக்கத்திலும் கழிவுநீர் வாய்க்கால், சாலை விரிவாக்கத்துடன் புதிய தார் சாலை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
மேம்பாலம் பணி நிறைவு பெற்ற நிலையில், இரு பகுதியிலும் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.வடமங்கலம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிக்காக 300 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக மண் சாலை அமைத்தனர். இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதியால் மற்ற வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வந்தனர்.
இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்துபொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் தார் சாலை அமைத்தனர். இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து நெடுஞ்சாலை துறையினரை பாராட்டினர்.

