Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்


ADDED : அக் 29, 2024 06:33 AM

Follow on Google

ADDED : அக் 29, 2024 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்விசார் செயல் தளத்தை மேம்படுத்த பள்ளி கல்வி இயக்ககம் மூலம் நமது வகுப்பறைகளில் புத்தாக்க திறனை வளர்த்தெடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பயிலரங்கில் 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 120 ஆசிரியர்கள் நேரடியாகவும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் காணொலி மூலமாகவும் பங்கேற்றனர்.

இணை இயக்குநர் சிவகாமி பயிலரங்கை துவக்கி வைத்தார். ஏ.ஐ.டி., செயலாக்க இயக்குநர் சுந்தரமூர்த்தி, தலைமை செயலாக்க அதிகாரி விஷ்ணு வரதன் மற்றும் தி லேர்னர்ஸ் கான்ஃபிளுயன்ஸ் அமைப்பு இணை நிறுவனர் செந்தில் குமரன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயற்சி அளித்தனர்.

பயிலரங்க அமர்வுகளில் கிடைத்த சிறப்பான கற்றல் குறித்து ஆசிரியர்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பயிலரங்கில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், இணை இயக்குநர் சிவகாமி கூறுகையில், நமது ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் புத்தாக்கத்தை வளர்த்து உருவாக்குவதற்கு அவசியமான கருவிகளையும், வழிமுறைகளையும் பயிலரங்கம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap