/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை
/
நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை
ADDED : ஜன 24, 2024 04:28 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை அரசு உறுதிமொழிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கில் நடந்தது.
சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். குழுவின் தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த கூட்டத்தில்,எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, ஆறுமுகம், அசோக்பாபு, சிவசங்கர் மற்றம் சட்டசபை செயலர் தயாளன் கலந்து கொண்டனர்.
இதில்நலவழித்துறை, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகளில், முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள், சட்டசபையில் அறிவித்த நலத்திட்ட உறுதி மொழிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி ஏற்படுத்துதல், இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில்புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல், டாக்டர் பற்றாக்குறை மற்றும் சிலரின் அலட்சியப்போக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்தல், மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்தனர்.
மேலும், ரேஷன் அட்டைகளை காலத்தோடு வழங்கவும், ரேஷன் கடைகளை திறப்பது குறித்தும், குடும்பத் தலைவிக்கான மாதாந்திர உதவி தொகை வழங்குவதில் உள்ள குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில், அரசு செயலர் பங்கஜ் குமார் ஜா, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, சமூக நலத்துறை இயக்குநர் குமரன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

