/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இடிந்து விழுந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை
/
இடிந்து விழுந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை
இடிந்து விழுந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை
இடிந்து விழுந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை
ADDED : ஜன 23, 2024 04:34 AM
புதுச்சேரி : மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அரசு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி ஆட்டுப்பட்டி உப்பனாறு வாய்காலை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றது.அந்த வாய்க்காலுக்கு அருகில் மூன்றுமாடி கட்டடம் திடீர் என்று இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாய்க்காலுக்கு அருகில் வீடு வைத்திருப்பவர்களையும் மற்றும் வீடு கட்டிக் கொண்டிருக்கும் மக்களையும் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்களும் ஒப்பந்ததாரரும் எந்த விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் பணிகளை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவாக புதுமனை புகுவிழா நடக்க இருந்த நிலையில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.
இடிந்து விழுந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் .அது மட்டும் அல்லாமல் ஆதிதிராவிட நலத்துறை மூலம் மீண்டும் வீட்டை புதுப்பிக்க உடனடியாக உதவி வழங்க வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறை பொறுப்பேற்று அவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள உதவி செய்ய வேண்டும். பொதுப்பணித் துறை அமைச்சர் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவ வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

