/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ புரோட்டான் சிறப்பு மருத்துவர் இன்று புதுச்சேரி, நாளை காரைக்காலில் முகாம்

ADDED : ஜன 19, 2024 07:36 AM
புதுச்சேரி: அப்போலோ புரோட்டான் நுரையீரல், மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் இன்று புதுச்சேரியிலும், நாளை காரைக்காலிலும் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல், மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் காதர் உசைன், புதுச்சேரி எண்-22, 14வது குறுக்கு தெரு, ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அப்போலோ புரோட்டான் ஆலோசனை மையத்தில், இன்று (19ம் தேதி) மதியம் 3:00 முதல், 5:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
நாளை 20ம் தேதி, காரைக்கால் பி.கே., சாலை கோல்டன் நகரில் உள்ள ஷிபா மருத்துவமனையில், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் மீடியாஸ்டினல் கட்டிகளுக்கான மார்பகஸ்கோபி அறுவை சிகிச்சை, ரோபோடிக் உதவி தொராசிக் அறுவை சிகிச்சை, நெஞ்சு சுவர் கட்டி அகற்றல், மேற்பட்ட 3டி புனரமைப்பு, எண்டோ மூச்சுகுழாய், எண்டோஸ் கோபிக் அல்ட்ரா சவுண்ட், நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
முன்பதிவிற்கு, 99430 99523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.