/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பணி எழுத்து தேர்வு: 13ம் தேதி சிறப்பு பயிற்சி துவக்கம்
/
உதவியாளர் பணி எழுத்து தேர்வு: 13ம் தேதி சிறப்பு பயிற்சி துவக்கம்
உதவியாளர் பணி எழுத்து தேர்வு: 13ம் தேதி சிறப்பு பயிற்சி துவக்கம்
உதவியாளர் பணி எழுத்து தேர்வு: 13ம் தேதி சிறப்பு பயிற்சி துவக்கம்
ADDED : மே 10, 2025 01:16 AM
புதுச்சேரி: உதவியாளர் பணியில் சேர எழுத்துத் தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ம் தேதி துவங்குகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் மூலம், உதவியாளர் பணியில் சேர எழுத்துத் தேர்வுக்கான, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடப்பட உள்ளது.
இந்த வகுப்பு வரும் 13ம் தேதி துவக்கப்படுகிறது. வார நாட்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இந்த வகுப்புகள் நடக்கிறது. அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள், புதுச்சேரி நடேசன் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தேசிய வாழ்வாதார சேவை மையத்தை நேரில் அணுகவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.