/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பு முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

ADDED : ஜன 23, 2024 04:33 AM

புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி புதுச்சேரி கோவில்களில் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எல்.இ.டி., திரையின் மூலம் கண்டுகளித்தனர்.
வரதராஜப் பெருமாள் கோவில்
காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சுவாமி சன்னிதியில் கோதண்டராம சுவாமி, லட்சுமணர், சீதை மற்றும் அனுமனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
தொடர்ந்து ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம், ஸ்ரீராம நாம கீர்த்தனைகள் நடந்தது. உலக நலன் கருதி மகா சங்கல்பம், அர்ச் சனை, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணியளவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் வேதபுரீஸ்வரர் கோவில் நடந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.