/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலாப் பயணிகளை படக்கில் ஏற்றி செல்ல தடை
/
சுற்றுலாப் பயணிகளை படக்கில் ஏற்றி செல்ல தடை
புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரியின்போது சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படக்கில் ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலோர இன்ஸ்பெக்டர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, வைத்திக்குப்பத்தில் நாளை (3ம் தேதி) மாசிமக தீர்த்தவாரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, மீனவ மக்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை, மீன்பிடி படகு வைத்துள்ளவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆகையால், அனைத்து கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர்கள், அவர்களுடைய மீன்பிடி படகுகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு ஏற்றி செல்ல கூடாது. தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

