/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது முதன்மை கல்வி அதிகாரி வாழ்த்து
/
சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது முதன்மை கல்வி அதிகாரி வாழ்த்து
சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது முதன்மை கல்வி அதிகாரி வாழ்த்து
சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது முதன்மை கல்வி அதிகாரி வாழ்த்து
ADDED : பிப் 01, 2024 11:31 PM

திருக்கனுார்: சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற வாதானுார் அரசு பள்ளி ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வாழ்த்தினார்.
புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளிகளில், சிறந்த பள்ளியாக வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. குடியரசு தின விழாவில், சிறந்த பள்ளிக்கான லயன் அம்பாதி நாராயணன் சுழற்கோப்பையை கவர்னர் தமிழிசை வழங்கினார்.
விருது பெற்ற வாதானுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, துணை இயக்குனர் (தொடக்கநிலை) முனுசாமி ஆகியோர் வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் வீரய்யன், ஆசிரியர்கள் பாலகுமார், சரவணன், பார்வதி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.