ADDED : ஜூன் 05, 2025 07:20 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி; நெல்லித்தோப்பில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லித்தோப்பு, கஸ்துாரிபாய் நகர், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அஜய், 22; பெரிய மார்க்கெட்டில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி மதியம், தனது பி.ஒய் 01 சி.எக்ஸ் 8664 பதிவெண் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பைக்கை, வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று துாங்கியுள்ளார்.
மறுநாள் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அஜய் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





