Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரியாணி மாஸ்டர் மயங்கி விழுந்து பலி 

 பிரியாணி மாஸ்டர் மயங்கி விழுந்து பலி 

 பிரியாணி மாஸ்டர் மயங்கி விழுந்து பலி 


ADDED : ஏப் 13, 2026 05:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 05:09 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, வைத்திக்குப்பம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரத்னா திலிப், 38; முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பிரியாணி உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில், ஆந்திராவை சேர்ந்த ரேபள்ளி ஹேமந்த் கனக வரபிரசாத், 38; பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவர் புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கடையில் வேலை செய்யும் மற்ற 2 பேர் கனக வரபிரசாத் தங்கியுள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் எந்தவித அசைவின்றி தரையில் மயங்கி கிடந்துள்ளார்.

தொடர்ந்து, கனக வரபிரசாத்தை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு பரிசோதனை செய்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us