sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் போட்டியிடுகிறது பா.ஜ., கோரிக்கையை ஏற்றார் ரங்கசாமி

/

புதுச்சேரியில் போட்டியிடுகிறது பா.ஜ., கோரிக்கையை ஏற்றார் ரங்கசாமி

புதுச்சேரியில் போட்டியிடுகிறது பா.ஜ., கோரிக்கையை ஏற்றார் ரங்கசாமி

புதுச்சேரியில் போட்டியிடுகிறது பா.ஜ., கோரிக்கையை ஏற்றார் ரங்கசாமி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு, என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் பா.ஜ., அதிக ஆர்வமாக உள்ளது. வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளையும் ஏற்கனவே துவக்கி விட்டது.

புதுச்சேரிக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கடந்த வாரம் புதுச்சேரியில் முகாமிட்டார். கட்சி நிர்வாகிகளை அழைத்து லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், நிர்மல் குமார் சுரானா நேற்று காலை புதுச்சேரிக்கு மீண்டும் வந்தார். கட்சியின் மாநில நிர்வாகிகளுடனும், அணிகளின் நிர்வாகிகளுடனும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டம் முடிந்தவுடன், முதல்வர் ரங்கசாமியின் வீட்டிற்கு சுரானா சென்றார். சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோரும் உடன் சென்றனர். ரங்கசாமிக்கு பொன்னாடை அணிவித்த சுரானா, லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ., போட்டியிட விரும்புவதாக முறைப்படி தெரிவித்தார். இதற்கு ரங்கசாமி சம்மதம் தெரிவித்து விட்டதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.அடுத்த கட்டமாக, வேட்பாளர் தேர்வில் பா.ஜ., நிர்வாகிகள் முழு வீச்சில் களம் இறங்கி விட்டனர். இதனால், என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar