/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷ வாயு தாக்கி 2 பேர் இறந்த விவகாரம் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் புகார்
/
விஷ வாயு தாக்கி 2 பேர் இறந்த விவகாரம் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் புகார்
விஷ வாயு தாக்கி 2 பேர் இறந்த விவகாரம் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் புகார்
விஷ வாயு தாக்கி 2 பேர் இறந்த விவகாரம் பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் புகார்
ADDED : ஜன 14, 2024 03:47 AM
புதுச்சேரி, : தமிழகத்தில் பாதாள சாக்கடை பணியின்போது விஷ வாயு தாக்கி இருவர் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆணையத்தில், புதுச்சேரி மாநில பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் புகார் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், பாதாள சாக்கடை மேன் ஹோல் மூடியை திறந்த போது துப்புரவு தொழிலாளர் ஜான் பீட்டர், மற்றும் இன்ஜினியர் கோவிந்தன் ஆகியோர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
ராஜபாளையம் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ், 258 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.
தேசிய துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளின் படி, துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும் பொழுது உயிர் காக்கும் நவீன தொழில் நுட்ப விஷ வாயுவை கண்டறியும் சோதனை முறையை பயன்படுத்திய பின் தான், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
அதற்கென அதி நவீன தொழில்நுட்பம் கண்டறியும் சாதன உபகரணங்கள் உள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் எதையும் கடைப்பிடிக்காமல், அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இருவர் உயிரிழப்பிற்கு பிரதான காரணம்.
இதுகுறித்து டில்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் வெங்கடேசனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

