Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : டிச 08, 2025 05:20 AM

Follow on Google

ADDED : டிச 08, 2025 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காற்று படைப்பகம் சார்பில், மூன்று தலைமுறை பெண்களின் நுால்கள் வெளியீட்டு விழா, புதுச்சேரி ஆர்.கே.என்.,கிராண்ட் ஓட்டலில் நடந்தது.

நுாலாசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். மயிலம் சிவஞான பாலாய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் பேசுகையில், 'மூன்று தலைமுறை பெண்களின் இத்தகைய படைப்பாற்றல் பெண்ணினத்தின் பெரும் சாதனையாக விளங்குகிறது. இதுபோன்று இன்னும் பல்வேறு படைப்புகளை உருவாக்கி சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பினை கொடுக்கவேண்டும்' என்றார்.சிறப்பு விருந்தினராக போக்குவரத்து பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா பங்கேற்று, அம்மா, மகள், பேத்தி என, மூன்று தலைமுறைப் பெண்கள் எழுதிய வண்ணக் கோலங்கள் - விஜயலட்சுமி, ஆடை வடிவம் அழகு -சங்கம் காட்டும் தோற்றம்-ராஜலட்சுமி, கால் நனைத்த பொழுதுகள் - அமிர்தவள்ளி ஆகிய நுால்களை வெளியிட்டனர்.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் பட்டம்மாள் நுால் திறனாய்வு குறித்து பேசினார். விழாவில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். நுாலாசிரியர் அமிர்தவள்ளி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap