/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு
ADDED : ஜன 10, 2024 12:04 AM
புதுச்சேரி : வில்லியனுாரில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார், பிராமினர் வீதியை சேர்ந்தவர் தணிகாசலம். இவர் இறந்த விட்டார்.
இவரது மனைவி கலைவாணி,47; இவர், சென்னையில் வசிக்கும் தனது மூத்த மகளை பார்க்க கடந்த 28ம் தேதி சென்றார். இவரது வீட்டு முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக, எதிர்வீட்டில் உள்ளவர்கள் கலைவாணிக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று வந்து பார்த்தபோது, வீட்டு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 1.6 லட்சம் ஆகும்.
இது குறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா கட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

