/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி படத்தை ஆபாசமாக சித்தரித்த கணவர் மீது வழக்கு
/
மனைவி படத்தை ஆபாசமாக சித்தரித்த கணவர் மீது வழக்கு
ADDED : ஜன 14, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். பெங்களூரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து செல்வார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது.
இவரது மனைவி பெயரில் போலியாக டுவிட்டர் கணக்கு துவக்கி அதில், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினார். இது குறித்து அவரது மனைவி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

