/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு
/
பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2024 11:21 PM
புதுச்சேரி: கெஸ்ட் ஹவுஸ் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியில் கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வருபவர் முனுசாமி, 40; இவரது கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த, புதுச்சேரியை சேர்ந்த நாராணயன் என்பவர், அறையில் இருந்த ஏ.சி.,யை கழற்றி சென்றார். இதுபற்றி, உரிமையாளர் முனுசாமி நேற்று அவரை கேட்ட போது, கெஸ்ட் ஹவுசில் இருந்த டி.வி., கேமரா உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
முனுசாமி கொடுத்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, நாராயணனிடம் விசாரித்து வருகின்றனர்.

