/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணம் தயாரித்த 6 மீது வழக்கு பதிவு
/
போலி ஆவணம் தயாரித்த 6 மீது வழக்கு பதிவு
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காலாப்பட்டு கேண்டீன் வீதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் பிரேம்ராஜ், 40; இவருக்கு சொந்தமான நிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ளது.
இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன், செல்லப்பன், ராணி உட்பட 6 பேர் போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி பிரேம்ராஜ், கடந்த 2021ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கோர்ட், பிரேம்ராஜிக்கு சொந்தமான நிலம் என உறுதிசெய்தது.
அதையடுத்து, போலி ஆவணம் தயாரித்த ரங்கநாதன் உள்ளிட்ட 6 பேர் மீது விசாரணை செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

