ADDED : அக் 20, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையான்பேட்டை தொகுதி சாந்தி நகரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி மூலம், உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் இரண்டாவது மெயின் ரோடு, சாந்தி நகர் 2வது குறுக்கு வீதிகளுக்கு, தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 40.30 லட்சம் செலவில், புதிய சிமென்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை தொகுதி எம்.எல்.ஏ ., நேரு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

