/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசு அலுவலகங்கள் அரை நாள் மூடப்பட்டது
/
மத்திய அரசு அலுவலகங்கள் அரை நாள் மூடப்பட்டது
ADDED : ஜன 23, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷத்தையொட்டி புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்தன.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான, ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக அலுவலகம், தலைமை தபால் நிலையம், கிராமப்புற தபால் நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நேற்று அரை நாள் விடுமுறை விடப்பட்டு மூடியிருந்தன.
மதியத்திற்கு பிறகு திறக்கப்பட்டு இயங்கின.

