ADDED : ஜன 24, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில், மதர் தெரேசா பார்மஸி கல்லுாரியில், செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு, 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு, பொது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ரோஷன், 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தீவதர்ஷன், பொது பிரிவில் அகிலன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், காதுகேளாதோர் விளையாட்டு கழக பொதுச் செயலாளர் பாசிக் தலைமை தாங்கினார்.
சத்தியபுவனம் முன்னிலை வகித்தார்.
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சரவணன், வினோத்குமார், சீனிவாசா கன்ஸ்ட்ரக் ஷன் நிர்வாக இயக்குநர் மணிகண்ட சீனிவாசன், செய்கை மொழிபெயர்ப்பாளர் ஹபில்லா, சங்க நிர்வாகிகள் அஜித்குமார், ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

